
விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
இன்று காலை ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து தொழிலாளிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணிபுரிந்து வந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...