

சிவகாசி அருகே விளாம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் அதிகம் இயங்கி வருகின்றன. இங்கு பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும், விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று விளாம்பட்டியில் பட்டாசு ஆலையில் பட்டாசில் மருந்து செலுத்தியபோது ஏற்பட்ட விபத்தில் கருப்பசாமி, தங்கவேல் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் இரு பெண்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.