

தமிழகத்தில் கரோனா பரவல் அச்சம் கொள்ள தேவையில்லை என்றாலும், முதியோர்கள் மற்றும் நோயுற்றவர்கள் நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பொது சுகாதார இயக்குநர் டி.எஸ் செல்வவிநாயகம் கூறுகையில்,
முதியவர்கள் மற்றும் நோய்த் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியவும், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 493 பேர் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,876 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 137 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர். 51 பேருக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் புதிய கரோனா தொற்று பதிவாகியுள்ளன.
சென்னையில் அதிகபட்சமாக புதிதாக 132 பேருக்கும், அதைத் தொடர்ந்து கோவை (43), கன்னியாகுமரி (41), செங்கல்பட்டு (31), திருவள்ளூர் (26), சேலம் (23). மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் 10 முதல் 19 வரை கரோனா தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளன.
கரோனா முதல் மூன்று அலையைப் போன்று வேகமாக உயரும் என பீதியடையத் தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.