
இன்று (ஏப். 15) திருநங்கையர் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநங்கையர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'திருநங்கையர் என்ற சொல்லால் அவர்தம் மாண்பு காத்ததோடு, நாட்டிலேயே முதன்முறையாக நலவாரியத்தைத் தொடங்கிச் செயலாலும் அவர்களைப் பேணியவர் கலைஞர்! அதைத்தான் திருநங்கைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம்!' என்று பதிவிட்டுள்ளார்.
இந்நாளையொட்டி, திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்காக 2023 ஆம் ஆண்டு சிறந்த திருநங்கை விருதினை வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பி. ஐஸ்வர்யா வுக்கு வழங்கினார். மேலும் தலைமைச் செயலகத்தில் திருநங்கைகள் பலரும் முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...