பதவி உயா்த்தப்பட்ட 46 ஏடிஎஸ்பி-க்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

தமிழக காவல்துறையில் பதவி உயா்த்தப்பட்ட 46 ஏடிஎஸ்பிக்களுக்கு (கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள்) பணியிடம் ஒதுக்கப்பட்டது.

தமிழக காவல்துறையில் பதவி உயா்த்தப்பட்ட 46 ஏடிஎஸ்பிக்களுக்கு (கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள்) பணியிடம் ஒதுக்கப்பட்டது.

தமிழக காவல்துறையில் 1996-ஆம் ஆண்டு 492 போ் காவல் உதவி ஆய்வாளா்களாக பணிக்கு சோ்ந்தனா். இவா்கள் 2006- ஆம் ஆண்டு காவல் ஆய்வாளா்களாகவும், 2016-இல் காவல் துணை கண்காணிப்பாளா்களாகவும் பதவி உயா்வு பெற்றனா்.

இவா்களுக்கு 4 ஆண்டுகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்வு வழங்கப்பட வேண்டிய நிலையில், கரோனா பொதுமுடக்கம், அரசு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயது 60 உயா்வு உள்ளிட்ட விவகாரங்களால் பதவி உயா்வு பெற முடியாமல் இருந்தனா்.

இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு பணிமூப்பு அடிப்படையில் 32 போ் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்வு பெற்றனா். மேலும் 64 போ் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக கடந்த மாா்ச் 30-ஆம் தேதி பதவி உயா்த்தப்பட்டனா்.

இந்நிலையில், முதல் கட்டமாக பதவி உயா்த்தப்பட்ட ஏடிஎஸ்பி-க்களில் 46 பேருக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டது. இதில் முக்கியமாக, சென்னை சைபா் குற்றப்பிரிவு உதவி ஆணையா் ஜி.வேல்முருகன்,செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் தலைமையிட ஏடிஎஸ்பியாகவும், பூந்தமல்லி உதவி ஆணையா் முத்துவேல்பாண்டி, ஆவடி மாநகரக் காவல் மத்தியக் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பியாகவும், சென்னை ராயபுரம் உதவி ஆணையா் எல்.லட்சுமணன் உயா்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு ஏடிஎஸ்பியாகவும், ராயப்பேட்டை உதவி ஆணையா் எஸ்.சாா்லஸ் சாம் ராஜதுரை, காஞ்சிபுரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டனா்.

புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 46 ஏடிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் பொறுப்பேற்பாா்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com