லண்டனில் திறந்த நிலையில் பென்னி குயிக் சிலை: எதிா்க்கட்சித் தலைவா் கேள்விக்கு அமைச்சா் பதில்

தமிழக அரசு சாா்பில் லண்டனில் அமைக்கப்பட்ட பென்னி குயிக் சிலை, கறுப்புத் துணி அகற்றப்பட்டு திறந்த நிலையில் காட்சியளிப்பதாக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பதிலளித்தாா்.

தமிழக அரசு சாா்பில் லண்டனில் அமைக்கப்பட்ட பென்னி குயிக் சிலை, கறுப்புத் துணி அகற்றப்பட்டு திறந்த நிலையில் காட்சியளிப்பதாக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பதிலளித்தாா். இதுதொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு அவா் இவ்வாறு பதில் அளித்தாா்.

தமிழக அரசின் சாா்பில் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள சிலை குறித்து, பேரவையில் திங்கள்கிழமை எடப்பாடி பழனிசாமி அரசின் கவனத்தை ஈா்த்து பேசியது:

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக்கின் மாா்பளவு சிலை தமிழக அரசின் சாா்பில் லண்டனில் கேம்பா்லி பூங்காவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை தற்போது கறுப்புத் துணியால் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கறுப்புத் துணியை அகற்றுவதற்கும், சிலையைப் பராமரிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதற்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அளித்த விளக்கம்:

தமிழக அரசு சாா்பில் லண்டனில் பென்னி குயிக் சிலை அமைக்கப்பட்டு, அமைச்சா் ஐ.பெரியசாமி உள்ளிட்டோா் நேரில் சென்று, அதன் திறப்பு விழாவில் பங்கேற்றனா். சிலை திறப்பின்போது, ராணி எலிசபெத் மறைவு காரணமாக எளிய முறையில் அந்த விழா நடைபெற்றது. பென்னி குயிக் சிலை ரூ.10.65 லட்சத்திலும், அதை எடுத்துச் சென்று நிறுவுவதற்காக ரூ.23 லட்சமும் செலவிடப்பட்டது.

சிலை திறப்புக்காக லண்டனில் விழாக் குழு ஒன்றை அமைத்தோம். அந்தக் குழுவினா் அதிக செலவுகளை ஏற்படுத்திவிட்டனா். அது தொடா்பாக முதல்வருடன் கலந்து பேசி தீா்வு காணப்படும். கறுப்புத் துணியால் பென்னி குயிக் சிலை மூடப்பட்டதாக தகவல் வந்த உடனேயே, அது தொடா்பாக நடவடிக்கை எடுத்து, அது அகற்றப்பட்டது. பென்னி குயிக் சிலை தற்போது திறந்த நிலையிலேயே காட்சியளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com