
கோப்புப் படம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதை விடுத்து நிரந்தரமாக பணி வழங்க வேண்டும், தொழிலார்களுக்கு வழங்கி வேண்டிய பஞ்சப்படி உள்ளதா கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போராட்டத்தில் ஈடுபட உள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்லவன் இல்லத்தில் மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குனரிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை விரைவில் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.