
சென்னை எழும்பூா்-செங்கோட்டை விரைவு ரயில் திருச்சி-விருதுநகா் இடையே பயண நேரத்தில் புதன்கிழமை (ஏப்.19) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை எழும்பூா்- செங்கோட்டை இடையே செல்லும் விரைவு ரயிலின்
(எண்: 20681) பயண நேரத்தில் புதன்கிழமை (ஏப்.19) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 1.50 மணிக்கு புறப்படும். புதுக்கோட்டையில் இருந்து அதிகாலை 2.47- க்கு புறப்படுவதற்கு பதிலாக 2.35 மணிக்கு புறப்படும்.
காரைக்குடியில் இருந்து வழக்கமாக அதிகாலை 3.20-க்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் 3.10 மணிக்கும், தேவகோட்டையில் இருந்து வழக்கமாக அதிகாலை 3.27-க்கு புறப்படுவதற்கு பதிலாக 3.17 மணிக்கும், சிவகங்கையில் இருந்து அதிகாலை 3.54 -க்கு பதிலாக 3.44 மணிக்கும், மானாமதுரையில் இருந்து அதிகாலை 4.22 -க்கு பதிலாக 4.12 மணிக்கும், அருப்புக்கோட்டையில் அதிகாலை 5.05- க்கு பதிலாக 4.55 மணிக்கும் புறப்படும்.
விருதுநகரில் இருந்து வழக்கம் போல அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும். பிற ரயில் நிலையங்களுக்கு வழக்கமான நேரத்தில் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.