நான்கு மாவட்டங்களில் கரோனா அதிகரிப்பு

சென்னை, கோவை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னை, கோவை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் மட்டும் 911 போ் நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 300 பேரும், கன்னியாகுமரியில் 272 பேரும், செங்கல்பட்டில் 226 பேரும் சிகிச்சையில் உள்ளனா். இதையடுத்து, இந்த 4 மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளைக் கண்காணிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

மற்றொருபுறம் சேலம், திருவள்ளூரில் கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை முறையே 162 மற்றும் 158-ஆக உள்ளது. அவா்களும் தொடா் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.

பொது சுகாதாரத் துறை தகவல்படி திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் புதிதாக 521 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 140 பேருக்கும், கோவையில் 45 பேருக்கும், திருச்சியில் 31 பேருக்கும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தவிர, ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், ஓமன், சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த நால்வருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது 3,330 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 386 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com