
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
இதற்கு பதில் அளித்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், 'பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாலை லிட்டருக்கு ரூ. 35 கொடுத்து நாம் வாங்குகிறோம்; வெளிமாநிலத்தவர் அதனைவிட ரூ.5 முதல் 7 அதிகமாகக் கொடுத்து வாங்குகின்றனர். கொள்முதல் விலை உயர்வு குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்மையில் பரவிய நோயால் பல்வேறு மாநிலங்களில் மாடுகள் பாதிக்கப்பட்டன. ஆனால், தமிழக அரசு எடுத்த கடும் நடவடிக்கையால், தமிழகத்தில் கால்நடை நோய் பரவாமல் தடுக்கப்பட்டது.
பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு எவ்வித இடையூறுமின்றி எப்போதும்போல் தொடர்ந்து பால் வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.