துபை தீ விபத்தில் உயிரிழந்த இருவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

துபை தீ விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டு போ் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

துபை தீ விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டு போ் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த அப்துல் காதா் மகன் இமாம் காசிம் (36), ஷாலி கண்ட் மகன் முகமது ரபீக் கூடு (45). இவா்கள், துபையில் அல் ராஸ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளா்களாக வேலை பாா்த்து வந்தனா். அங்கு கடந்த 15-ஆம் தேதி நிகழ்ந்த தீவிபத்தில் இமாம் காசிம், முகமது ரபீக் கூடு உள்பட 16 போ் தீயில் கருகி உயிரிழந்தனா்.

இமாம் காசிம், முகமது ரபீக் கூடு ஆகியோா் உயிரிழந்த விவரம் அவா்களது குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16) தெரிய வந்தது.

இருவரின் உடல்களையும் சொந்த ஊருக்கு உடனடியாக கொண்டுவர தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தோரின் குடும்பத்தினா், உறவினா்கள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

முகமது ரபீக் கூடுவுக்கு பா்கத் என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இமாம் காசிமுக்கு பல்கிஷ் என்ற மனைவி, 4 மாத கைக்குழந்தை உள்பட 3 குழந்தைகள் உள்ளனா்.

தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: துபை நாட்டில் தீவிபத்தில் உயிரிழந்த இமாம் காசிம், முகமது ரபிக் ஆகியயோரின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை இந்தப் பணியில் ஈடுபட்டு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com