குழந்தைகளின் கல்வி குறித்து பேசிய உதவி ஆய்வாளருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

குழந்தைகளின் கல்வி உரிமை குறித்து பேசிய காவல்துறை உதவி ஆய்வாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் கல்வி குறித்து பேசிய உதவி ஆய்வாளருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை: குழந்தைகளின் கல்வி உரிமை குறித்து பேசிய காவல்துறை உதவி ஆய்வாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறையில் உதவி ஆய்வாளராக இருக்கும் காவல் துறை அதிகாரியான பரமசிவம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு குடும்பத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

இன்றைய நாளிதழில் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் படித்தேன், பகிர்ந்து கொள்கிறேன். காவல் துறையினரின் பணி குற்றங்களை தடுப்பது மட்டுமல்ல, நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் அவர்களுக்கும் பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த பென்னலூர்பேட்டை உதவி ஆய்வாளராக இருக்கும் பரமசிவத்தை பாராட்டுகிறேன்.

காணொளியின்படி, தேர்வுக்கு குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை என்று அரசுப் பள்ளி ஊழியர்கள் தகவல் கொடுத்தையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பென்னலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்திற்கு நேரில் சென்ற உதவி ஆய்வாளர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கிறார்.

அந்த விடியோவில், பள்ளிக் கட்டணம், உணவு அல்லது வீட்டுப் புகார்கள் என்று எதுவாக இருந்தாலும் நீங்கள் என்னை காவல் நிலையத்தில் அணுகலாம் என்று பரமசிவன் கூறுவதைக் கேட்க முடிகிறது.

அவர் மேலும் கூறுகையில், பதிலுக்கு எனக்கு ஒரே ஒரு உதவி செய்யுங்கள். இந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். அவர்கள் வளர்ந்து யதார்த்தத்தை உணரும்போது, ஏன் எங்களை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை என்று உங்களிடம் அவர்கள் கடினமான கேள்விகளை எழுப்பப் போகின்றனர்.

உதவி ஆய்வாளர் பரமசிவன், குழந்தையின் கல்வி உரிமை குறித்தும், பள்ளிகளில் முட்டை உள்ளிட்ட ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை அரசு வழங்குவது குறித்தும் கிராம மக்களுக்கு விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com