
கோப்புப்படம்
தமிழகத்தில் 12, 11 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. அதுபோல பிளஸ் 1 பொதுத் தேர்வு ஏப்ரல் 5ஆம் தேதி நிறைவு பெற்றது.
தற்போது பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இவை வரும் 20ஆம் தேதியுடன் நிறைவு பெறவிருக்கின்றன.
இந்த நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி முதலே பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெறவிருக்கிறது. இவை மே மாதம் முதல் வாரத்திலேயே நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 5ஆம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவுகளை மே 10ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே 19ஆம் தேதியும் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால், விடைத்தாள் திருத்தும் பணிகளை முழு வீச்சில் நடந்து விரைவில் நிறைவு பெறவிருப்பதால், தேர்வு முடிவுகள் திட்டமிட்ட காலத்துக்கு முன்கூட்டியே வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.