12 மணி நேர வேலை: தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசனை

12 மணி நேர வேலை மசோதா தொடற்பாக முக்கிய தொழிற் சங்கங்களுடன் தமிழக அரசு நாளை மறுநாள்(ஏப்.24) ஆலோசனை நடத்தவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

12 மணி நேர வேலை மசோதா தொடற்பாக முக்கிய தொழிற் சங்கங்களுடன் தமிழக அரசு நாளை மறுநாள்(ஏப்.24) ஆலோசனை நடத்தவுள்ளது.

தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் உள்ளிட்டோர்  முக்கிய தொழிற் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

12 மணி நேர வேலை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், நாளை மறுநாள்  3 மணிக்கு தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலத்துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சிகள் வெளிநடப்பு செய்தன.  

எனினும் கடும் எதிர்ப்புக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா பேரவையில் ஒருமனதாக நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், நாளை மறுநாள்  3 மணிக்கு தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com