சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார்கள் தொடர்பாக மாணவிகள் புகார் அளிப்பதற்காக புதிய சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறியும், சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவிகள் போராட்டத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கலாஷேத்ரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பேராசிரியர் ஹரிபத்மன் மீது, பாலியல் அத்துமீறல் குறித்து புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு ஹரிபத்மன் மீது 3 பிரிவுவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே தலைமறைவான ஹரிபத்மனை தென் சென்னை கூடுதல் காவல் ஆணையரப் பிரேம் ஆனந்த்சின்ஹா தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர்கள் 4 பேர் மீது கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிப்பதற்கு வசதியாக https://reachoutsupport.co.in என்ற சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் அமைத்த 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவிகள் அளிக்கும் புகார்கள், புகார் அளிப்பவர்கள் குறித்து யாரிடமும் பகிரப்படாது மற்றும் கல்லூரி நிர்வாகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படாது. சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்திலும் நேரில் புகார் அளிக்கலாம் என்று நீதிபதி கண்ணன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.