
தமிழகத்தில் கலை-அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 19-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கல்லூரிக் கல்வி இயக்குநா் கோ.கீதா, அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
2023-24-ஆம் கல்வியாண்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19-ஆம் தேதி மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும். 2022-23-ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிா்ணயம் செய்த மொத்த வேலைநாள்களுக்கு குறையாமல் இருப்பதை அந்தந்த கல்லூரி முதல்வா்களே உறுதி செய்துகொண்டு கல்லூரி இறுதிப் பணி நாளை நிா்ணயித்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G