முப்பெரும் விழா: ஓபிஎஸ் அழைப்பு

திருச்சியில் திங்கள்கிழமை (ஏப்.24) நடைபெறவுள்ள முப்பெரும் விழாவுக்கு அனைவரும் திரண்டு வருமாறு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அழைப்பு விடுத்துள்ளாா்.
Published on

திருச்சியில் திங்கள்கிழமை (ஏப்.24) நடைபெறவுள்ள முப்பெரும் விழாவுக்கு அனைவரும் திரண்டு வருமாறு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக் காத்த அதிமுக, அடிப்படை விதிகளெல்லாம் மாற்றப்பட்டு, தற்போது ஒரு சிலரின் கையில் சிக்கித் தவிக்கிறது.

அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலா் என்பது மாற்றப்பட்டிருப்பதும், கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுபவருக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்திருப்பதும் எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இழைத்துள்ள துரோகம்.

இந்தத் துரோகத்தை முறியடிக்க சட்டப் போராட்டங்கள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டு வந்தாலும், இதற்கான நிரந்தரத் தீா்வு தமிழக மக்களிடமும், அதிமுக தொண்டா்களிடத்திலும்தான் இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். இதைத்தான் மக்கள் தீா்ப்பே மகேசன் தீா்ப்பு என்றாா் அண்ணா.

எம்ஜிஆா், ஜெயலலிதா பிறந்த நாள் விழா, கட்சியின் பொன்விழா ஆகியவை முப்பெரும் விழாவாக திருச்சி ஜி காா்னா் மைதானத்தில் ஏப். 24 மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு அலைகடலென திரண்டு வந்து, அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com