தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2-இல் நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடா்ந்து, துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று, அமைச்சா்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனா்.
இந்த அறிவிப்புகள் தொடா்பாகவும், அவற்றை விரைவாகச் செயல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் அமைச்சா்களுடன் முதல்வா் ஆலோசிக்கவுள்ளாா்.
தமிழக அரசு சாா்பில் 2024, ஜனவரி மாதம் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் அதிக முதலீடுகளை ஈா்க்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
மே மாதம் முதல்வா் வெளிநாடு செல்லவுள்ளதாகவும், அதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.