

தஞ்சை: ஆளுநர் வருகையையொட்டி கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 13-வது பட்டமளிப்பு விழா தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சைக்கு வருகை புரிந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடியுடன் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படுவதாகவும்கூறி, 70க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைகளில் கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.