குட்கா, பான் மசாலாவை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை ஆணையரால் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலைக்கான தடை ஆணையானது கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
இதனிடையே, அந்த தடை ஆணையை சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் வாதத்தினை ஏற்று சென்னை உயா் நீதிமன்ற தீா்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கியுள்ளது.
அதன்படி தற்போது தமிழகத்தில் குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவற்றுக்கான தடையாணை நீடிக்கிறது. விதிகளை மீறுவோா் மீது சட்டப்படி உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.