தில்லியில் நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

தில்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்துப் பேசினார். 
தில்லியில் நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
Updated on
1 min read

தில்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்துப் பேசினார். 

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 6.00 மணிக்கு சென்னையிலிருந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். 

அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, வரும் ஜூன் 5-ம் தேதி கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையின் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். 

தொடர்ந்து பிற்பகல் 1.30க்கு முதல்வர் மீண்டும் சென்னை திரும்புவதற்காக தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். மும்பை செல்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அங்கு வந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் விமான நிலையத்தில் சந்தித்து, சிறிது நேரம் பேசினர். 

மும்பை செல்வதற்காக தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்குச் சென்ற போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com