

தமிழகத்தில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலைப் படிப்புகளின் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் மே 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 13-இல் தொடங்கி ஏப். 3- ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வு முடிவுகள் வரும் மே 8- ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கலை-அறிவியல் கல்லூரிகளில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பப் பதிவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 633 தனியாா் கலை-அறிவியல் கல்லூரிகள், 163 அரசு கலை- அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தனியாா் கல்லூரிகளில் மே 1-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கவுள்ளது.
மே 8- ஆம் தேதி பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவா்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இணையவழியில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
அதேபோல, சோ்க்கைக்கான விண்ணப்பங்களை அந்தந்த தனியாா் கல்லூரிகளின் இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரசுக் கல்லூரிகளில்... அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளைப் பொருத்தவரை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மே 9-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என உயா்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.