தானியங்கி மது விற்பனை: இபிஎஸ்-க்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

தானியங்கி மது விற்பனை குறித்த எடப்பாடி பழனிசாமியின் கண்டனத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.
அமைச்சா் செந்தில்பாலாஜி
அமைச்சா் செந்தில்பாலாஜி
Updated on
1 min read

தானியங்கி மது விற்பனை குறித்த எடப்பாடி பழனிசாமியின் கண்டனத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் Mall shopகளில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், 'உள்ளேன் அய்யா' என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பழனிசாமி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெளிநாடுகளில் உள்ளதுபோன்று பணம் செலுத்தினால் மது வழங்கும் தானியங்கி இயந்திரம் சோதனையில் அடிப்படையில் சென்னையில் நான்கு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் பணம் செலுத்தினால், தேவையான மதுபான வகை வந்துவிடும். 21 வயதுக்கும் மேற்பட்டோர் மட்டுமே இந்த இயந்திரத்தின் மூலம் மதுபானம் பெற முடியும். 

அத்துமீறலை தடுப்பதற்காக இயந்திரத்தின் அருகில் டாஸ்மாக் விற்பனையாளர் ஈடுபட்டுள்ளனர். டாஸ்பாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, அதை தடுக்கவும் மாற்று ஏற்பாடுகள் செய்யும் வகையில் இந்த மதுபான தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com