

சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி, ராஜாஜி சாலையில் ஆகஸ்ட் 4,10,13-ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சாா்பில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா, சென்னை தலைமைச் செயலகத்தில் வழக்கம்போல கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, ஆகஸ்ட் 4,10,13-ஆம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒத்திகை நிகழ்ச்சியால், அந்த 3 நாள்களிலும் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை ராஜாஜி சாலையிலும், காமராஜா் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் நேப்பியா் பாலத்திலிருந்து போா் நினைவுச் சின்னம் வரை காமராஜா் சாலையிலும், போா் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்படும்.
காமராஜா் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.
அதேபோல், பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை,ஈ.வெ.ரா. பெரியாா் சாலை,பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை வந்தடையலாம், அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சந்திப்பு,முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.