சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றுக்கு விடியற்காலை முதலே ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து காவிரியில் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டனர்.
ஆடி 18ம் தேதியான இன்று மக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவது வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் காவிரி ஆற்றை தெய்வமாக வணக்கி அதை வரவேற்று அதில் நீராடி வழிபடுவர்.
ஆடிப்பெருக்கு நாளில் புதுவெள்ளமாக ஓடும் காவிரி ஆற்றில் நீராடி அம்மனை வணங்குவதால் காவிரியன்னை தன்னை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவர் அமையும் என்றும், திருமணமான பெண்களுக்கு கணவனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பாள் என்பது நம்பிக்கை.
இந்த அற்புத தினத்தில் காவிரி படித்துறையில், மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி, ஏதேனும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்து திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் மஞ்சள் கயிரை மாற்றிக்கொள்ளுவது வழக்கம்.
அதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றுக்கு விடியற்காலை முதலே ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து காவிரியில் புனித நீராடி காவிரி தாயை வணங்கியும், ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி தங்கள் குலதெய்வ சுவாமி சிலைகளை காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்து சுத்தம் செய்து சுவாமிக்கு அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டனர்.
பின்னர் காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்துச் சென்று முன்னோர்கள் சமாதிக்கு தெளித்து பொங்கல் வைத்து கிடாவெட்டி முன்னோர்களை வணங்கினர்.
பூலாம்பட்டி காவேரி ஆற்றங்கரையோரம் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பூலாம்பட்டி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை மாதப் பலன்கள் - மீனம்

திரைப்படம் என்பது ஒருவரின் பயணம் மட்டுமே அல்ல... படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்த சம்யுக்தா!

ஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற ஆர்வலரின் உடல்நிலை கவலைக்கிடம்!

சித்திரை மாதப் பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


