
கோப்புப்படம்
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 61.26 அடியிலிருந்து 60.11 அடியாக சரிந்தது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கர்நாடகா அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 154 கன அடியிலிருந்து 131 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் 61.26 அடியிலிருந்து 60.11 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 24.76 டி.எம்.சி ஆக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...