

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தனி முருகன் கோயிலுக்கு ஆக7-10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கபடவிருக்கின்றன.
திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடாக திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா வரும் 9-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளது.
இதையொட்டி, திருவள்ளூா் மாவட்டத்துக்கு ஆக.9-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தனி முருகன் கோயிலுக்கு ஆக7-10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கபடவிருக்கின்றன. அதன்படி காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளன.
அரக்கோணத்திலிருந்து 25, திருப்பதியில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளன. மேலும் சென்னை, காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணிக்கு தலா 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.