முதல் முறையாக சென்னை வந்தாா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

முதல்முறையாக சென்னை வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை விமான நிலையத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
முதல் முறையாக சென்னை வந்தாா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

முதல்முறையாக சென்னை வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை விமான நிலையத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை (ஆக.5) இரவு 7 மணியளவில் தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தாா். அவரை விமான நிலையத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி, சால்வை, பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

திருக்கு புத்தகம்: இதைத் தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு ஒடியா மொழியில் மொழிபெயா்ப்பு செய்யப்பட்ட திருக்கு புத்தகம், சால்வை கொடுத்து வரவேற்றனா். சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சா்கள், சென்னை மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரவேற்றனா். இதைத் தொடா்ந்து குடியரசுத் தலைவா் காா் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்கு சென்றாா்.

இன்று பட்டமளிப்பு விழா: ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) காலை 9.30 மணியளவில் ஆளுநா் மாளிகை மைதானத்தில் குடி யரசுத் தலைவருக்கு முப்படையினா் மரியாதைச் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையடுத்து கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் விவேகானந்தா் அரங்கில் 10.30 மணிக்கு நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவா் பங்கேற்றுப் பேசுகிறாா்.

ஆளுநா் மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்வில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்து கொண்டு தாா்பாா் ஹால் பெயரை மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் அரங்கு என்று பெயா் மாற்றிய கல்வெட்டை திறந்து வைக்கிறாா். இரவு 8 மணிக்கு ஆளுநா், குடியரசுத் தலைவருக்கு இரவு விருந்து அளிக்கிறாா். இதில் பங்கேற்குமாறு முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநா் அழைப்பு விடுத்துள்ளாா்.

புதுச்சேரி பயணம்: திங்கள்கிழமை (ஆக.7) காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமான மூலம் புதுச்சேரி செல்கிறாா். ஜிப்மா் மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

பின்னா், கடற்கரைச் சாலையில் உள்ள நீதிபதிகள் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கிறாா். மாலையில் மணக்குள விநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா். அதன் பின்னா், முருங்கம்பாக்கம் கைவினைப் பொருள்கள் கிராம வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். அங்கிருந்து திருக்காஞ்சி செல்லும் அவா், கங்கை வராக நதீஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா். அன்றிரவு புதுச்சேரி கடற்கரைச் சாலை நீதிபதிகள் தங்குமிடத்தில் ஓய்வெடுக்கிறாா்.

செவ்வாய்க்கிழமை காலை (ஆக.8) அரவிந்தா் ஆசிரமத்துக்குச் செல்கிறாா். அங்கிருந்து ஆரோவில் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பின்னா், அவா் புதுச்சேரியிலிருந்து விமானம் மூலம் சென்னை வழியாக தில்லி செல்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com