நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் லாரி கவிழ்ந்து விபத்து!

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் லாரி கவிழ்ந்து விபத்தில் 4 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் லாரி கவிழ்ந்து விபத்து!
Updated on
1 min read

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் லாரி கவிழ்ந்து விபத்தில் 4 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்திலிருந்து,  இரவுப் பணி முடித்து விட்டு, இன்று அதிகாலை, என்எல்சி வாகனத்தின் மூலம், 4  தொழிலாளர்கள், சுரங்கத்திலிருந்து மேலே வந்து கொண்டிருந்தனர்.

சனிக்கிழமை இரவு மழை பெய்ததினால், சுரங்கத்தில் இருந்து மேலே வரக்கூடிய வழித்தடம் சேரும் சகதியுமாக இருந்த காரணத்தினால், சுரங்கத்தில் உள்ள டாப் பெஞ்சில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சுரங்கத்திற்குள் குப்புற கவிழ்ந்தது.

இந்நிலையில் வாகனத்தில் உள்ளே இருந்த தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலாளிகள்,  உடனடியாக அவர்களை மீட்டனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் நெய்வேலி என்எல்சி  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முகமது என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com