
நான் முதல்வன் போன்ற திட்டம் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தும் திட்டமாக இருக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நான் முதல்வன் திட்டம் என் மனதுக்கு நெருக்கமானத் திட்டம். நான் முதல்வன் திட்டத்தை உதயநிதி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 13.14 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதைச் சொல்வதில் அளவில்லா மகிழ்ச்சி.
761 கலைக்கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில் 93 ஆயிரம் மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பத்தனர். அதில் 83 ஆயிரம் பேர் வேலை பெற்றுள்ளனர்.
நான் முதல்வன் திட்டம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 50,844 பொறியியல் மாணவர்கள், 20,082 கலை அறிவியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் திட்டத்தில் 2.8 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களால் முதல்வர் ஆக்கப்பட்டவன் நான். அனைத்து மக்களையும் முதல்வன் ஆக்கும் திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். ஓராண்டு காலத்தில் இத்தனை மாணவர்கள் உயர்ந்துள்ளனர்.
ஒரே திட்டம் தமிழ்நாட்டு மாணவர்களிடையே எத்தகைய அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி வருகிற்து என்பதற்கு உதாரணம்தான் நான் முதல்வன் திட்டம்.
சிறந்த கல்லூரியில் படித்தால்தான் வேலைவாய்ப்பு என்ற விதியை மாற்றி, தமிழ்நாட்டில் எந்த கல்லூரியில் பயின்றாலும் திறன் பயிற்சி வழங்கப்பட்டு பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லும் அளவுக்கு இளைஞர் திறன் மேம்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.