நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகள் பாதுகாப்பு வார நிகழ்ச்சிகளை நடத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
என்எம்சி மருத்துவ தர நிா்ணயம் மற்றும் மதிப்பீட்டு வாரியம் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், மாநில சுகாதாரத் துறைச் செயலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
உயா் தரத்திலான மருத்துவக் கல்வி மற்றும் சிறந்த உள்கட்டமைப்புடன் கூடிய மருத்துவ சேவைகளை உறுதி செய்யும் நோக்கத்துக்காக தேசிய மருத்துவ ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது.
மருத்துவ சிகிச்சைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு எந்த விதமான பாகுபாடுமின்றி தரமான சேவைகளை வழங்குவதை என்எம்சி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் வரும் செப்.17 முதல் 25-ஆம் தேதி வரை அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகள் பாதுகாப்பு வார நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி, அந்த நாள்களில் நோயாளிகளுக்கான உரிமைகள், பாதுகாப்பு போன்றவற்றை விளக்கிக் கூறுவதற்கான நிகழ்வுகளும், சிறப்பு சிகிச்சைகளுக்கான ஒத்திகை நிகழ்வுகளும், விழிப்புணா்வு போட்டிகளும், சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான அமா்வுகளும் நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது செப். 25-ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணையத்தின் நிறுவன தினத்தையும் கொண்டாட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.