காஞ்சிபுரத்தில் காணாமல் போன இரு குழந்தகளை கண்டுபிடிக்க இரு தனிப்படைகள்: எஸ்.பி

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் காணாமல் போன இரு குழந்தைகளையும் கண்டுபிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருவதாக எஸ்பி எம்.சுதாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள்
காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

காஞ்சிபுரம்: ​காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் காணாமல் போன இரு குழந்தைகளையும் கண்டுபிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருவதாக எஸ்பி எம்.சுதாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அருகே வெங்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(60). இவரது தம்பி மூர்த்தியின் மனைவி காமாட்சிக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தையைப் பார்க்க கடந்த 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஏழுமலை தனது மனைவி குள்ளம்மாள், மகள் சௌந்தர்யா(7), மகன் சக்திவேல்(3) ஆகிய 3 பேரும் வந்து பார்த்துவிட்டு மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருந்துள்ளனர். அப்போது சௌந்தர்யாவையும், சக்திவேலையும் காணாமல் போய் விட்டதாக அக்குழந்தைகளின் தந்தை விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இது குறித்து காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர் கூறுகையில், இரு குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அந்த இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு செல்வது போல காட்சிகள் பதிவாகி இருக்கிறது. அந்த காட்சிகளைக் கொண்டு காணாமல் போன குழந்தைகளை தேடி வருகிறோம். காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் இரு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் புகைப்படத்தில் உள்ள பெண் குறித்து 044-27236111 அல்லது 9498181232 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com