பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற போக்குவரத்துக்கழகப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் சாா்பில் பரிசுப் பணம், சான்றிதழை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.
பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளா்களின் குழந்தைகளில் மதிப்பெண் வரிசைப்படி 5 பேருக்கு இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுனம் சாா்பில் தலா ரூ.5,000, அடுத்த நிலையில் உள்ள 10 பேருக்கு தலா ரூ.1,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்திலுள்ள போக்குவரத்துத்துறை அமைச்சரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பணத்தையும், சான்றிதழ்களையும் வழங்கினாா். அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கு.இளங்கோவன், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் (பொ) க.குணசேகரன், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவன பொது மேலாளா் ஆனந்த் சம்பத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.