என்னுடைய குடும்பத்தின் ஒரு பகுதியாகவே வயநாடு மக்களைப் பார்க்கிறேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் பொதுமக்கள் முன்பு பேசிய ராகுல் காந்தி, வயநாடு தொகுதிக்கு மீண்டும் வந்ததை மகிழ்ச்சியாக உணர்கிறேன். தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது ஒட்டுமொத்த வயநாடு தொகுதி மக்களும் எனக்கு துணையாக இருந்தனர். கடினமான காலத்திலும் நீங்கள் எனக்குத் துணையாக இருந்தீர்கள்.
பழங்குடி மக்களை வனவாசி என்று வகைப்படுத்தி ஒதுக்குவதே வக்கிரமான செயல். வனவாசி என்ற சொல், காட்டுக்கு உண்மையான உரிமையாளர்கள் என்ற பொருளைத் தருகிறது.
மேலும், காட்டுக்குள் மட்டுமே வரையறுக்கிறது. வனவாசி என்ற சொல்லுக்கு பின்னால் உள்ள அரசியல் மோசமானது. நீங்கள் காட்டை விட்டு காட்டுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். வேறு எங்கும் வரக்கூடாது என்று சுட்டிக்காட்டுகிறது. இது ஏற்புடையதல்ல.
பழங்குடியினரை எந்த கட்டுப்பாடுகளும் விதித்து அடக்கக் கூடாது, முழு இந்தியாவும் அவர்களுக்கானது. இந்த உலகம் பரந்து விரிந்தது எனக் குறிப்பிட்டார்.