அவிநாசி: கிராம சபைக் கூட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்!

அய்யம்பாளையம் ஊராட்சி கானாங்குளம் ஆதிராவிடர் காலனியில் அடிப்படை வசதி கோரி, அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராம சபை கூட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கானாங்குளம் பகுதி மக்கள்
கிராம சபை கூட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கானாங்குளம் பகுதி மக்கள்
Updated on
1 min read

அவிநாசி: அய்யம்பாளையம் ஊராட்சி கானாங்குளம் ஆதிராவிடர் காலனியில் அடிப்படை வசதி கோரி, அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கானாங்குளம் ஆதிதிராவிடர் காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓராண்டுக்கு மேலாகியும் ஆற்றுகுடிநீர் வருவதில்லை. மயானத்தில் குடிநீர், பாதை, மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. ஒரே வீட்டில் 2 குடும்பத்தினருக்கு  மேல் வசித்து வரும் நிலையில், கா.சா. எண் 103-ல் பட்டா வழங்க வேண்டும். கானாங்குளம் பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் அமைப்பதற்கு  டெண்டர் விட்டு கட்டட பணி தொடங்கி, ஓராண்டுக்கு மேலாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாதியில் நின்ற பணியை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கானாங்குளம் பகுதி மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com