
ரஜினி நடித்து வெளியாகியுள்ள ஜெயிலர் படத்துக்கு தடை விதித்து, யுஏ சான்றிதழை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி இந்த வழக்கை தொடுத்துள்ளார். படத்தில் வன்முறை காட்சிகள் உள்ளதால் யுஏ சான்றிதழ் வழங்கியிருப்பது தவறு என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் வெளியானது. ஜெயிலர் படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
எந்திரன், கபாலி, 2.0 திரைப்படங்களை தொடர்ந்து, ரஜினியின் நான்காவது படமாக ஜெயிலர் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...