கோப்புப் படம்
கோப்புப் படம்

டிடிவி தினகரன் திவாலானவர் என அறிவிக்க எந்தத் தடையுமில்லை: அமலாக்கத் துறை வாதம்!

திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து தினகரன் மேல்முறையீடு செய்தார். 
Published on

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்க சட்டப்படி எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

ஃபெரா சட்டத்தில் பதிவான வழக்கில் 728 கோடி அபராதம் கட்டாததால் தினகரன் திவாலானவர் என அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து தினகரன் மேல்முறையீடு செய்தார். 

அபராதத்தை செலுத்தவில்லை என்பதற்காக திவாலானவர் என அறிவிக்கக் கோர முடியாது என்று தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com