சந்திராயன் 3 சாதனையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பிரமாண்டமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்ட சாதனையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக பிரமாண்டமானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை: சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்ட சாதனையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக பிரமாண்டமானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது தமிழ்நாட்டுக்கு மிகப் பெரும் நிறைவை அளிக்கிறது.
சந்திரயான் - 1, 2, 3 ஆகிய திட்டங்களை, முறையே மயில்சாமி அண்ணாதுரை, மு.வனிதா, ப.வீரமுத்துவேல் எனத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று சிறந்த அறிவியலாளர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்தியுள்ளனர். இவர்களது அர்ப்பணிப்புணர்வும் திறமையும் நமக்கு எழுச்சியூட்டுகிறது.
தமிழ்நாட்டின் இளந்திறமையாளர்கள் அனைவரும் இவர்களது வழித்தடத்தைப் பின்பற்றி, நம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்காற்றிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...