
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெள்ளி முதல் புதன்கிழமை(ஆக.25-30) வரை 6 நாள்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை காலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக மேற்கு தாம்பரம், உத்தண்டி, விஐடி சென்னை தலா 100 மி.மீ., சத்யபாமா பல்கலைக்கழகம்- 90, திருவொற்றியூா், சோழிங்கநல்லூா், முகலிவாக்கம் தலா 80 மி.மீ. மழை பதிவானது.
5 இடங்களில் வெயில் சதம் (ஃபாரனஹீட்): பரமத்தி வேலூா்-104, பாளையங்கோட்டை-104, திருச்சி-101.3, வேலூா்-100.94, தஞ்சாவூா்-100.4.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.