காட்டுமன்னார்கோவில் அருகே 6 உலோக சிலைகள் கண்டெடுப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது 6 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அருகே 6 உலோக சிலைகள் கண்டெடுப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது 6 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பொல்லா பிள்ளையார் அமைந்துள்ள திருநாரையூர் கிராமத்தில் உத்திராபதி என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டுவதற்கு சனிக்கிழமை கடப்பாறையால் அஸ்திவாரம் தோண்டும் போது சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அஸ்திவாரம் தோண்டும் பணியில் இருந்த வள்ளல் இதுகுறித்து வீட்டு உரிமையாளருக்கு தெரிவித்துள்ளார். அவர் அப்படியே இருக்கட்டும் எனக் கூறி வேலையாட்களை மாற்று வேலை செய்ய சொல்லிவிட்டு மாலை வீட்டிற்கு அனுப்பி விட்டார். 

அதன் பிறகு வீட்டு உரிமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தோண்டி சிலையை தங்கள் வீட்டில் வைத்துள்ளனர்.

மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு வந்த வள்ளல் அந்த இடம் தோண்டப்பட்டு இருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்து கிராம உதவியாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் சீனுவாசன், கிராம நிர்வாக அலுவலர் ரவி ஆகியோர் உரிமையாளர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஆறு சிலைகள் மீட்கப்பட்டு வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குமராட்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் அமுதா மற்றும் போலீசார் மீட்கப்பட்ட 6 சிலைகளை மீட்டனர். இதுகுறித்து சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீண்டும் அந்த குழியை தோண்டும் போது அதில் மேலும் சிலைகள் இருப்பதை அறிந்து தோண்டி வருகின்றனர். தற்போது கைப்பற்றப்பட்ட உலோக சிலைகளில் சிவன், பார்வதி ஆடிப்பூர அம்மன், போக சக்தி அம்மன், பஞ்சமூர்த்தி அம்பாள், இடம்புரி விநாயகர் ஆகியன பீடத்துடன் உள்ளது. 

மேலும் சிலைகளை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன், தொல்லியல் துறை அதிகாரிகள விரைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com