
ஓணம் பண்டிகையை ஒட்டி சேலத்தில் உள்ள கேரள மக்கள் அத்த பூக்கோலம் வரைந்து நடனமாடி கொண்டாடினர்.
கேரளத்தில் ஓணம் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாள்களுக்கு ஓணம் கொண்டாடப்படுகிறது.
மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக, ஆட்சி செய்து வந்த மகாபலி ஒவ்வொரு ஆண்டும் வந்து மக்கள் நன்றாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை.
மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்தப்பூ கோலம் போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி கேரள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
இதன் அடிப்படையில் சேலத்தின் பல்வேறு பகுதியில் வசிக்கும் கேரளா மாநில மக்கள் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.
சேலம் சங்கர் நகர் பகுதியில் உள்ள கேரள சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை திருவிழா கொண்டாடப்பட்டது.
அதிகாலை முதலிலே பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து வண்ண பூக்களை கொண்டு, அத்தப்பூ கோலம் வரைந்து பூக்களைச் சுற்றிலும் நடனமாடி, பாட்டுப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிக்க: திருவொற்றியூரில் கோயில் காளை இறப்பு: பக்தர்கள் அஞ்சலி!
மேலும், ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பகிர்ந்து கொண்டு ஓனம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதுபோல சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓணம் பண்டிகை களைக்கட்டியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...