இன்று எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

வெள்ளிக்கிழமை மழைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இன்று எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

சென்னை: நேற்று முழுக்க பல இடங்களில் மழைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே பலருக்கும் ஓரளவுக்கு தெரிந்துவிட்டிருக்கும். இருந்தாலும் தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்னவென்றால்..

இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்வதும் வெயில் அடிப்பதுமாக இருக்கும். இன்று நாள் முழுக்க இதே நிலை தொடரும். புயல் சின்னம் தீவிரமடைந்ததும், கரு மேகங்கள் நம்மை சூழ்ந்துகொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இங்கொன்றும் அங்கொன்றுமாக மழை பெய்யும். சில இடங்களில் திடீரென பலத்த மழையும் பொழியும் என்று தெரிவித்திருந்தார்.

அதற்கேற்றார் போல இன்று காலை முதலே சூரியன் உச்சந்தலையில் சூளிரென்று வெயில் கற்றைகளால் அடிக்கும்போதே, எங்கிருந்தோ ஒரு மழைத்துளியும் நம்மை தாக்குகிறது. பிறகென்ன மழைக்காலம் போல ஒரே மழைதான். குடையைத் தேடி எடுத்து பிடித்துக் கொண்டு நடக்கையில் ஓ.. உங்களிடம் குடை இருக்கிறதா என்று அறிந்ததும் மழை தனது மேகக் கூட்டங்களை எல்லாம் மடித்துவைத்துக்கொண்டு ஓடோடி விடுகிறது. மீண்டும் சூரியன் தனது வேலையைத் தொடங்குகிறது.

சூரியன் வேலையத் தொடங்கியதே என்று பெண்கள் யாரேனும் துவைத்த துணியை வெளியே போட்டீர்களானால்.. அது மறுமுறை அலசப்படும்.. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

நன்றாக வெயில் அடிக்கிறதே.. பக்கத்தில் இருக்கும் கடைதானே என்று குடை இல்லாமல் வெளியே கிளம்ப வேண்டாம். கையில் குடை பத்திரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com