கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

4 மாநில தேர்தல் முடிவுகள்: வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published On :

சென்னை: நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2024, மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக பெரிதும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கா் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருகின்றன.

மும்முனைப் போட்டி நிலவிய தென் மாநிலமான தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்)கட்சியை அகற்றி அரியணையில் ஏறுகிறது காங்கிரஸ். 

இந்த நிலையில், நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.

அவர்களது ஆட்சிக்காலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் நல்ல மாற்றத்தையும், வளர்ச்சியையும் வளத்தையும்
அளிப்பதாக அமைய விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.