ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம்

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை மெட்ரோ ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை மெட்ரோ ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டிச.3 -ஆம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில்களில் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 5 முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். இதில், காலை 5 முதல் பகல் 12 மணி வரை, இரவு 8 முதல் இரவு 10 மணி வரை 10 நிமிஷ இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். பிகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிஷ இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷ இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com