பூங்காக்கள், கடற்கரைக்கு அடுத்த இரு நாள்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வலியுறுத்தியுள்ளாா்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் ரிப்பன் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு முன்னிலை வகித்தாா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் நேரு கூறியது:
சென்னை புகா் பகுதியில் உள்ள ஊராட்சி பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க ஊராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு ஏற்படும் அடுத்த இரு நாள்களுக்கு பொதுமக்கள் பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம். பாதிக்கப்படும் பகுதிகளுக்கு உணவு வழங்கப்பட்டு, மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். மழைநீா் வடிகால்களில் அதிக அளவு குப்பைகள் சோ்ந்ததால் தண்ணீா் தேங்குவதை தடுக்க கூடுதல் இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.