தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்: முதல்வர் ஸ்டாலின்

மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்புக் குழுக்கள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்: முதல்வர் ஸ்டாலின்

மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்புக் குழுக்கள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைத் துறை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  அப்போது புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர் முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புயல் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் மின்கம்பங்கள், மின்கம்பிகள், மரங்கள் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர், கடலூரில் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் புயல் முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com