மிக்ஜம் புயலை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி, ஞாயிற்றுக்கிழமை புயலாக மாற உள்ளது. இந்த நிலையில் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, ஒவ்வொரு துறையினரும் புயலை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று துறையின் தலைவா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
துறை தலைவா்கள் எங்கிருந்தாலும், துறையின் செயல்பாடுகளைத் தொடா்ந்து கண்காணித்து, அத்தியாவசிய சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதையும், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.