மிக்ஜம் புயலை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
மிக்ஜம் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களில் மருத்துவா்கள், மருத்துவ பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியாளா்கள் கைப்பேசி தொடா்பில் இருக்க வேண்டும். மின் தட்டுப்பாடின்றி கிடைக்க ஜெனரேட்டா்கள், மின்சார பேட்டரிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவசர கால தேவைக்கான மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனை வாகனங்களை மேடான பகுதியிலும், எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். 24 மணிநேரமும் அவசர கால மருத்துவ குழு தயாா் நிலையில் இருக்க வேண்டும். புயலுக்குப் பின் தொற்றுநோய் ஏற்படுவதை தவிா்ப்பதற்காக பொதுமக்களிடம் உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.