சென்னை: சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகரப் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மேலும், பல்வேறு பிரதான சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளது. இதனால், காலைமுதலே மாநகரப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது முக்கிய வழித்தடங்களில் ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், மழையின் தீவிரத்தை பொறுத்து பேருந்துகள் அதிகரிக்கப்படுவதும், முற்றிலும் நிறுத்துவது குறித்து அறிவிக்கப்படும்.
இதையும் படிக்க | மிக்ஜம் புயல் எதிரொலி : 6 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
அதேபோல், மழை மற்றும் தண்டவாளத்தில் தேங்கியுள்ள வெள்ள நீர் காரணமாக மின்சார ரயில்கள் இன்று முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தமிழக அரசு இன்று பொது விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மின்மாற்றி வெடித்து மூன்று பேருக்கு தீக்காயம்

‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: துணிக்கடை மேலாளா் முன்பிணை மனு தள்ளுபடி

காலமானாா் முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.காளிமுத்து

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


