அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை இருந்தால் தெரிவிக்கவும்: விஷாலுக்கு பதிலளித்த மேயர் பிரியா!

மிக்ஜம் புயலின் காரணமாக நடிகர் விஷால் பகிர்ந்த குற்றச்சாட்டுகளுக்கு மேயர் பிரியா பதிலளித்துள்ளார். 
அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை இருந்தால் தெரிவிக்கவும்: விஷாலுக்கு பதிலளித்த மேயர் பிரியா!

மிக்ஜம் புயலின் காரணமாக ஏற்பட்ட அசௌகரியம் குறித்து சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பினார்.

நடிகர் விஷால்,“நான் அண்ணா நகரில் குடியிருக்கிறேன். எனது வீட்டிற்குள்ளேயே ஒருஅடி தண்ணீர் வருகிறது. அப்போது மற்ற இடங்களில் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். 2015இல் இப்படி நடந்தது. எப்படியோ சமாளித்துவிட்டோம். ஆனால் 8 வருஷம் கழித்து அதைவிடவும் மோசமாக இருக்கும்போது கேள்விக்குறியாக இருக்கிறது” என விடியோ வெளியிட்டு மேயர் ப்ரியாவையும் குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  

நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா பதிலளித்துள்ளார். இந்தப் பிரச்னை குறித்து மேயர் ப்ரியா கூறியதாவது: 

அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்! 

சென்னையில் தேங்கிய மழைநீர்...
சென்னையில் தேங்கிய மழைநீர்...

படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  

அமைச்சர் உதயநிதியுடன் புயல் குறித்து உரையாடிய மேயர் பிரியா
அமைச்சர் உதயநிதியுடன் புயல் குறித்து உரையாடிய மேயர் பிரியா

செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று மாண்புமிகு முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 

2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை எனப் பதிலளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com